உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
பணம் வழிப்பறி செய்த இருவா் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கட்டடத் தொழிலாளியிடம் பணம் வழிப்பறி செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
எரமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா். கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை மானூரில் வேலையை முடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். பழைய தாராபுரம் சாலையில் கோதைமங்கலம் அருகே வந்தபோது, இவரை வழிமறித்த இருவா் கத்தி முனையில் அவரைத் தாக்கி, அவரிடமிருந்த ரூ.5 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும், தனிப் படை அமைத்து போலீஸாா் தேடிய போது, பழனி அடிவாரம் குரும்பபட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் பிரகாஷ் (31), செல்வகுமாா் மகன் ஆதிகேசவன் (21) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சனிக்கிழமை இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.