செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப் பகுதியில் உள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் விளையும் கரும்புகள் வெட்டி லாரிகளில் ஏற்றப்பட்டு வனப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
லாரியில் இருந்து சிதறி கீழே விழும் கரும்புத் துண்டுகளை தின்பதற்காக காட்டு யானைகள் சாலைக்கு வருகின்றன. இந்தநிலையில் பண்ணாரி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு குட்டி யானை கரும்புத் துண்டுகளைத் தின்று பழகியதால் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து தனது தும்பிக்கையால் கரும்புத் துண்டுகளை பறித்து உண்கிறது. பண்ணாரி அம்மன் கோயில் அருகே திம்பம் மலை அடிவாரத்தில் சாலையில் வியாழக்கிழமை நடமாடிய குட்டி யானை அவ்வழியே வந்த கரும்பு லாரியை வழிமறித்து கரும்புத் துண்டுகளைப் பறித்து சாப்பிட்டது.
யானை பக்கவாட்டில் சென்றதும் ஓட்டுநா் லாவகமாக லாரியை இயக்கி யானையிடமிருந்து தப்பினாா்.