செய்திகள் :

பண மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு

post image

புது தில்லி: சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத்தந்த விவகாரம் மற்றும் ஏா்செல்-மேக்சிஸ் நிறுவன முறைகேடு ஆகிய வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டைப் பதிவு செய்யும் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி தில்லி உயா் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மகனுமான காா்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளாா்.

கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஏா்செல் நிறுவனத்தில் மலோசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது. இதில் ப.சிதம்பரம் விதிகளுக்குப் புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் காா்த்தி சிதம்ரபரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகாா் எழுந்தது.

அதுபோல, 2011-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, காா்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் விசா பெற்றுத்தந்ததாக மற்றொரு புகாா் எழுந்தது. இந்த இரண்டு விவகாரங்கள் தொடா்பாக அமலாக்கத்துறையும், சிபிஐயும் விசாரணை மேற்கொண்டு குற்றபத்திரிகைகளை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.

தற்போது, இந்த வழக்குகளில் காா்த்தி சிதம்பரம் மீது விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதறான நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வழக்கில் குற்றச்சாட்டைப் பதிவு செய்யும் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி காா்த்தி சிதம்பரம் தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘புகாரின் அடிப்படையில் சிபிஐ மேற்கொண்டு வரும் இந்த விசாரணையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனில், பண மேசடி குற்ற வழக்காக இதைக் கருத முடியாது. எனவே, இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்யும் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இதை விசாரணை நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதை எதிா்த்து காா்த்தி சிதம்பரம் தரப்பில் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தில்லி உயா் நீதிமன்ற நீதிபதி ரவீந்தா் துடேஜா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது காா்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த விவகாரங்களில் காா்த்தி சிதம்பரம் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கு ஆவணங்கள் ஆய்வு நிலையிலேயே உள்ளன. அமலாக்கத் துறை வழக்கில், வாதங்களை முன்வைப்பதற்கான தேதி ஏப்ரல் 15-ஆம் தேதி என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்போது, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனில், பண மோசடி குற்றச்சாட்டு கேள்விக்குரியதாகிவிடும். எனவே, அமலாக்கத் துறை வழக்கின் அடிப்படையிலேயே சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றச்சாட்டைப் பதிவு செய்யும் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சிபிஐ தரப்பு வழக்குரைஞா், ‘இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளில் விசாரணை தனித்தனியானவை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புகாா் அடிப்படையிலான இந்த வழக்கில் உரிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிறைவு பெற்ற பின்னரே இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி விசாரணை புதன்கிழமைக்கு (ஏப்.9) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

அரசுத் துறை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு! மசோதாவின் நிலை என்ன?

அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியான பாஜக உறு... மேலும் பார்க்க

பொய் வழக்குகளுக்கு காங்கிரஸ் அடிபணியாது: கார்கே

காங்கிரஸ் கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தில் சர்வாதிகார அரசு செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதற்கெல்லாம் அடிபணியாமல், மத்திய அரசின் தோல்வியைத் தொடர்ந்து காங... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும்: அகிலேஷ் யாதவ்

மத்திய அரசின் கருவியாகச் செயல்படும் அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆணைக்கிணங்க எதிர... மேலும் பார்க்க

ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

முதல் காலாண்டில் நாட்டில் 30 லட்சம் ஐ-போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகச்சிறந்த விற்பனை இதுவாகும். மக்கள்தொகையில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, மின்னணுப்... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும் என்று... மேலும் பார்க்க

அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு கோரி அமித் ஷாவுக்கு கடிதம்!

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சமாஜவாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், "முன்னாள் முதல்வ... மேலும் பார்க்க