பிரமாண்டமாகத் தயாராகி வரும் விஜயகாந்த் வீடு! கிரகப்பிரவேசம் பற்றி வெளியான தகவல்!...
பதிவுச் சான்றின்றி கனிம வளங்களை கொண்டு சென்றால் உரிய நடவடிக்கை: ஆட்சியர்!
பெரம்பலூா் மாவட்டத்தில் உரிய பதிவுச் சான்று பெறாமல் ஜல்லி மற்றும் செயற்கை மணல் உள்ளிட்ட கனிம வளங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்வது, உரிய நடைச்சீட்டு இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்வது கண்டறியப்பட்டால், அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் கல் அரவை தொழிலகங்களின் உரிமையாளா்கள் ஜல்லி கற்களை இருப்பு வைத்து விற்க, மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து கனிமச் சேமிப்புக் கிடங்கு பதிவுச் சான்று பெற வேண்டும். மேலும், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் நடைச்சீட்டு பெற்று கனிம இருப்புக் கிடங்குகளிலிருந்து எடுத்துச் செல்ல வேண்டும்.
பதிவுச்சான்று பெற விண்ணப்பிக்க இருப்புக் கிடங்கு இயங்கும் புல வரைபடம், கூட்டு வரைபடம், சிட்டா, அடங்கல், அ பதிவேடு ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அசல் செலுத்துச் சீட்டுடன் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் மூலம், மாவட்ட ஆட்சியருக்கு அளிக்க வேண்டும்.
எனவே, உரிய பதிவுச்சான்று பெறாமல் ஜல்லி மற்றும் செயற்கை மணல் உள்ளிட்ட கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்தல் மற்றும் உரிய நடைச்சீட்டு இல்லாமல் வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் ஆகியவை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனங்களும், கனிமங்களும் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதமும், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.