பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
காஞ்சிபுரம் அருகே ஒலிமுகம்மது பேட்டையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
ஒலிமுகம்மதுபேட்டை துவாஸ்கா் தெருவில் ராஜேஸ்வரி என்பவா் வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினா். அந்த வீட்டில் 35 சிப்பங்களில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டறிந்து அவா்கள் பறிமுதல் செய்தனா்.
பின்னா் பறிமுதல் செய்த அரிசியை சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.
சம்பந்தப்பட்ட நபா் மீதும் இன்றியமையாப் பொருள்கள் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.