சமூக முன்னேற்றத்துக்கு மனித வளம் முக்கியம்: கவிஞா் வைரமுத்து
பயங்கரவாதத்துக்கு பிரதமரின் பதில்தான் ஆபரேஷன் சிந்தூர்: அமித் ஷா பாராட்டு
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இந்தத் தாக்குதலின் மூலம் இந்திய ராணுவத்தின் செயல்திறனை உலக அரங்குக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் முன்னிறுத்தும் நடவடிக்கையைத்தான் இந்தியா மேற்கொண்டது.
இந்த நிலையில், தில்லியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, ``பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான அரசியல் நிலைத்தன்மை, நமது உளவுத்துறையின் துல்லியமான தகவல்கள் மற்றும் ராணுவத்தின் செயல்திறன் ஆகியவை ஒன்றிணைந்ததுதான் ஆபரேஷன் சிந்தூர். பல ஆண்டுகளாக பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத அமைப்புகளால், பல்வேறு தாக்குதல்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில், பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து, உரியில் நடத்தப்பட்ட தாக்குதல், புல்வாமா தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. தற்போது, பஹல்காமில், சுற்றுலாப் பயணிகளின் மதத்தைக் கேட்ட பின்னர், அவர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதில்தான், ஆபரேஷன் சிந்தூர்.
இதற்காகவே, இந்தியாவை உலக நாடுகள் பாராட்டுகின்றன. வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய இரண்டு கடினமான எல்லைகளை பாதுகாக்கும் பொறுப்பு, எல்லைப் பாதுகாப்புப் படையிடம் வழங்கப்பட்டது. அந்த உயர்பொறுப்பைக் கருத்தில்கொண்டு, நீங்களும் அதனை மிகச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள்.
பஹல்காமில் மக்களை பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றதற்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அந்த பதில்தான், இன்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
இப்போது நமது ஆயுதப் படைகளையும் அவர்களின் தாக்குதல் திறன்களையும் முழு உலகமும் பாராட்டுகிறது’’ என்று தெரிவித்தார்.