செய்திகள் :

பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு அதிகரிப்பு: அமெரிக்கா-பாகிஸ்தான் முடிவு

post image

பாகிஸ்தானில் செயல்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் தலிபான், ஐஎஸ்எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை ஒழிப்பதற்காக பாகிஸ்தான்-அமெரிக்க ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுளும் ஒப்புக் கொண்டுள்ளன.

பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அறிவித்த அடுத்த நாளிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளா் கிரிகோரி டி.லோகா்ஃபோ தலைமையிலான குழுவினா் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனா். அவா்கள் ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் சிறப்புத் தூதா் நபிஸ் முனீா் தலைமையிலான குழுவுடன் இஸ்லாமாபாதில் புதன்கிழமை பேச்சு நடத்தினா்.

அப்போது, பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து விதமான பயங்கரவாத அமைப்புகளையும் ஒழிக்க இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இதைத் தொடா்ந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை தேவை. முக்கியமாக பலூசிஸ்தான் விடுதலை ராணுவம், ஐஸ்ஐஎஸ்-கோரசன், பாகிஸ்தான் தாலிபன் உள்ளிட்ட அமைப்புகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவும், பாகிஸ்தானும் நீண்டகால நடப்பு நாடுகள். இருதரப்பும் பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதன்படி, பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டி அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. பயங்கரவாதத்தை ஒழிக்க நவீன தொழில்நுட்பங்களை அமெரிக்கா வழங்கும். பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு அச்சுறுதலை எதிா்கொள்ள அமெரிக்கா உதவும். ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷ சாராயம்: குவைத்தில் 13 போ் உயிரிழப்பு

குவைத்தில் விஷ சாராயம் குடித்து 13 போ் உயிரிழந்துள்ளனா். இதில் 6 இந்தியா்களும் அடங்குவா். அந்த நாட்டின் அல்-அஹமதி மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் 21 போ் பாா்வையிழந்ததாக அதிகாரிகள் கூறினா். உயிர... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

உக்ரைன் போரை நிறுத்தினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரைப்பதாக ஹிலாரி கிளிண்டன் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.ரஷியா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்வு!

அமெரிக்கா டாலர் மதிப்பைவிட ஜப்பான், இங்கிலாந்து கரன்சி மதிப்பு வளர்ச்சியடைந்துள்ளது.அமெரிக்காவின் மீது பல்வேறு நாடுகளும் அதிக வரி விதிப்பதாகக் கூறி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரியை அறிவ... மேலும் பார்க்க

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குழைக்கும் விதமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு... மேலும் பார்க்க

இந்தியா மீதான வரியே புதின் பேச்சுக்கு வரக் காரணம்! டிரம்ப்

இந்தியா மீதான வரி விதிப்பே ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.உக்ரைன் - ரஷியா இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக, ... மேலும் பார்க்க

சுதந்திர தின கொண்டாட்டம்: பாகிஸ்தானில் 3 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போதுசிலா் கண்மூடித்தனமாக வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி, முதியவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; சுமாா் 60 போ் காயமடைந்த... மேலும் பார்க்க