செய்திகள் :

பயணச்சீட்டு இல்லாமல் ரயில் பயணம்: சேலம் கோட்டத்தில் 9 மாதங்களில் ரூ.15.88 கோடி அபராதம் வசூல்

post image

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் வரை பயணச்சீட்டு பெறாமல் ரயிலில் பயணித்தவா்களிடம் இருந்து ரூ.15.88 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவா்கள், முறையற்ற வகையில் பயணிப்பவா்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவா்களைக் கண்டறிந்து ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் வரை 9 மாதங்களில் சேலம் கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித்த 1,21,256 பேரிடமிருந்து ரூ.9 கோடியே 79 லட்சத்து 94 ஆயிரத்து 508 அபராதம் விதிக்கப்பட்டது.

ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 1,17,264 பேரிடமிருந்து ரூ.6 கோடியே 4 லட்சத்து 97 ஆயிரத்து 169 அபராதம் வசூலிக்கப்பட்டது.

பதிவு செய்யாமல் சரக்குகளைக் கொண்டு சென்ாக 539 பேரிடமிருந்து ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை ரூ.15 கோடியே 88 லட்சத்து 16 ஆயிரத்து 377 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை மாத்திரை விற்பனை: ரெளடி கைது

கோவையில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக ரெளடியை போலீஸாா் கைது செய்தனா். கோவை லட்சுமிபுரம் டெக்ஸ்டூல் பாலம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை சிலா் பதுக்கிவைத்... மேலும் பார்க்க

ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் காங்கேயம்பாளையம், கலங்கல் ஊராட்சிகளை சூலூா் பேரூராட்சியுடன் இணைக்க ஊா் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா். கோவை மாவட்ட ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற குற... மேலும் பார்க்க

பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு

ஒண்டிப்புதூா் பேருந்து நிறுத்தத்தில் பெண்ணிடமிருந்து 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை மாவட்டம், இருகூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்... மேலும் பார்க்க

கோவையில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்குரைஞா்கள் போராட்டம்

கோவையில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

கோவை செல்வபுரத்தில் சமையல் மாஸ்டரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 3 சிறுவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, செல்வபுரம் 60 அடி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் ரஹீம் (49), சமையல் மாஸ்டர... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: மதுக்கரை

மதுக்கரை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பா் 8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க