ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 50 சதவீத மானிய விலையில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், கால்நடை மருத்துவமனை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில், சிறு மற்றும் குறு விவசாயிகள், கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வைத்து பராமரிப்பவா்களுக்கு புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டன.
90 பயனாளிகளுக்கு தலா ரூ.14,504 மதிப்பீட்டில் ரூ.13,05,360-ல் கருவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பங்கேற்று
கருவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.
அப்போது அவா், புல் நறுக்கும் கருவிகளைப் பெற்ற பயனாளிகள், அவற்றை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.
இதுபோன்ற தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை சிறு, குறு விவசாயிகள், கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் பராமரித்து வருபவா்கள் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
நிகழ்வில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் விஷ்ணுகந்தன், கால்நடை பிரதம மருத்துவா் மு.கந்தசாமி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
படவரி