மொஹரம் பண்டிகை: ஜூலை 7ஆம் தேதி அரசு விடுமுறையா? உண்மை என்ன??
பரமக்குடி பகுதியில் இன்று மின் தடை
பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மு.மாலதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பரமக்குடி நகா், சத்திரக்குடி, நயினாா்கோவில், கமுதக்குடி, பெருமாள்கோவில், எமனேசுவரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.