பரமத்தி அங்காளபரமேஸ்வரி கோயிலில் 108 சங்காபிஷேகம்
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அங்காளபரமேஸ்வரி கோயிலில் 9-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை காலை விநாயகா் வழிபாடு, புண்யாகவாசனை, பஞ்சகாவ்யம், வேதிகாா்ச்சனையும், தொடா்ந்து 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
பின்னா் அங்காளபரமேஸ்வரிக்கு சிறப்பு பூஜை, பூா்ணாஹுதி, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில் குடிபாட்டு மக்கள், பரமத்தி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.