செய்திகள் :

பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை: முதல்வர்

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செயல்படும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அம்மாகாண முதல்வர் மிர் சர்ஃபராஸ் புக்தி உத்தரவிட்டுள்ளார்.

அம்மாகாண உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மிர் சர்ஃபராஸ் புக்தி மேற்கொண்ட உயர்நிலை அலோசனைக் கூட்டத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மண்டல மற்றும் துணை ஆணையர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மேலும், அவர் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை குறைத்து மதிப்பிட அனுமதிக்கமாட்டார்கள் எனவும் மீறுபவர்கள் மீது அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

மக்கள் போராட்டம்!

முன்னதாக, பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டாவில் நடைபெற்ற போராட்டத்தில் 3 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பலூச் யாக்ஜெஹ்தி ஆணையம் (பி.வொய்.சி.) எனும் மனித உரிமை அமைப்பின் தலைவரான மஹராங் பலூச் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மஹ்ரங் பலூச் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பலூசிஸ்தான் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடந்த மார்ச் 23 அன்று துர்பாத், மஸ்துங், கலாத், கஹாரன், சாகை மற்றும் பஞ்குர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரண்டாவது நாளாக கடையடைப்பு போராட்டம் கடைபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முதல்வருடனான அலோசனைக் கூட்டத்தில் பலூசிஸ்தானின் சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகள் விரிவான தகவல்கள் வழங்கினர்.

இதுகுறித்து, முதல்வர் கூறுகையில், மாகாணத்தின் பாதுகாப்பை உறுதி செய்து மாநில அதிகாரத்தை பாதுகாப்பதே முக்கிய கடமையெனவும் அங்குள்ள எந்தவொரு சாலையும் முடக்கப்பட அனுமதிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பலூசிஸ்தானின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாகிஸ்தானின் தேசிய கீதம் பாடப்படுவதையும் அந்நாட்டு கொடி ஏற்றப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: யேமன்: ஹவுதி படைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்! 2 பேர் பலி!

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க

துருக்கி மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ! விடியோ வைரல்!

துருக்கியில் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ வேடமணிந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொ... மேலும் பார்க்க

ஊர் ஊராகச் சென்று மக்களைத் தாக்கும் ஒற்றை யானை! ஒரே நாளில் 4 பேர் பலி!

ஜார்க்கண்டு மாநிலத்தில் மதம் பிடித்த ஒற்றை யானையின் தாக்குதலில் 12 மணி நேரத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். கும்லா மற்றும் சிம்டேகா ஆகிய மாவட்டங்களில் தனது கூட்டத்தை விட்டு பிரிந்ததாகக் கருதப்படும் காட்ட... மேலும் பார்க்க

திரைப்படம், நாடகம் மூலம் தீவிரவாதத்தை எதிர்க்கும் பாகிஸ்தான்!

தீவிரவாதத்தை திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் எதிர்க்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களின் பொது மற்றும் ராணுவத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் அந்நாட்டு பிரதமர... மேலும் பார்க்க