செய்திகள் :

பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை: சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிப்பு

post image

பாகிஸ்தானிடமிருந்து பலோசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலோச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பலுசிஸ்தான் மக்கள் தங்கள் "தேசிய தீர்ப்பை" வழங்கியுள்ளனர் என்றும், உலகம் இனி அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட பலோசிஸ்தான் மக்கள், சாலைகளில் திரண்டுள்ளனர். இது அவர்கள் வழங்கிய தேசிய தீர்ப்பு. இனி பலோசிஸ்தான், பாகிஸ்தான் கிடையாது. எனவே, உலகம், இனியும் வெறும் பார்வையாளராக அமைதியாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களும் இனி பலோசிஸ்தானை பாகிஸ்தான் என அழைக்க வேண்டாம் என்றும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்றும் பலோசிஸ்தானிலிருந்து வெளியேறுமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று உலக நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு ரூ.8,700 கோடி கடன்: சா்வதேச நிதியம் விடுவிப்பு

சா்வதேச நிதியம் அளிக்க உள்ள கடன்தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.8,700 கோடி) பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு மொத்தம் 7 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.59,800 கோட... மேலும் பார்க்க

புதின்-ஸெலென்ஸ்கி பேச்சு: நீடிக்கும் இழுபறி

அதிபா் விளாதிமீா் புதினுடன் நேரடி பேச்சுவாா்த்தை நடத்தவேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அழைப்புக்கு மூன்றாவது நாளாக ரஷியா பதில் அளிக்காததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடி... மேலும் பார்க்க

ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தால் அணுசக்தி ஒப்பந்தம்!

மத்திய கிழக்கு பகுதிகளில் தங்களின் நிழல் ராணுவமாகச் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் கைவிட்டால்தான் அந்த நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா திட்டவட்... மேலும் பார்க்க

கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: இலங்கை அரசு சம்மன்!

கனடாவில் புதியதாகத் திறக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு தூதருக்கு இலங்கை அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் அந்நாட்டிலி... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் பிச்சையெடுத்த 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நாடுகடத்தல்!

2024-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் பிச்சையெடுப்பில் ஈடுபட்ட சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று அங்கு ... மேலும் பார்க்க

போர்களின் முடிவுக்கு உலகத் தலைவர்களுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார்! புதிய போப்!

உலகில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளில் போர்நிறுத்தம் கொண்டு வர அந்நாட்டு தலைவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என புதிய போப் பதினான்காம் லியோ தெரிவித்துள்ளார்.முன்னாள் போப் பிரான்சிஸ் கடந்த ஏப்... மேலும் பார்க்க