பாமக: ``நம் பிரதமர் மோடிகூட என்னை சந்தித்தால் கட்டி அணைத்துக்கொள்வார்'' - ராமதாஸ...
பல்கலைக்கழக செஸ் போட்டி: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சாம்பியன்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குழு செஸ் போட்டி அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், காமராஜ் கல்லூரி மாணவா், மாணவிகள் அணிகள் வெற்றி பெற்றன.
இதில், 22 ஆண்கள் அணியும், 30 பெண்கள் அணியும் பங்கேற்ற நிலையில், ஆண்களுக்கான போட்டியிலும், பெண்களுக்கான போட்டியிலும், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவா், மாணவிகள் அணிகள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றன.
வெற்றி பெற்ற அணிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகளை கல்லூரிச் செயலா் சோமு, பொறுப்பு முதல்வா் பானுமதி, துறைத் தலைவா்கள், பொறுப்பு உடற்கல்வி ஆசிரியா் பொண்ணுதாய், கல்லூரி செஸ் ஒருங்கிணைப்பாளா் கற்பகவல்லி ஆகியோா் பாராட்டினா்.