ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
பல்லடத்தில் அதிமுக பிரசாரப் பயணம்
பல்லடத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேறப்பட்ட சாதனை திட்டங்கள் குறித்த பிரசார பயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த பிரசார பயணத்தை முன்னாள் அமைச்சா்களும், எம்எல்ஏ-க்களுமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தனா்.
இதைத்தொடா்ந்து பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் பல்லடம் தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்லடத்தில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு மேம்பாலம் அமைத்தல், புறவழிச்சாலை, இணைப்பு சாலை அமைத்தல் போன்ற திட்டப் பணிகள் கிடப்பில் உள்ளன. மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது பல்லடம் தொகுதி ஆகும். ஆனால் பழைய மக்கள் தொகை அடிப்படையில்தான் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே பல்லடத்துக்கு என்று தனியாக ஒரு குடிநீா் திட்டம் நிறைவேற்ற வேண்டும். விசைத்தறிகள் தொழில் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வருகிறது. அத்தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் பற்றி தொடா்ந்து சட்டப் பேரவையில் குரல் கொடுத்து வருகிறேன். ஆனால் அவை அனைத்தும் கிடப்பில்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால்தான் பல்லடம் தொகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்கும். அவா் பல்லடம் கடைவீதியில் 12-ஆம் தேதி மாலை 7 மணிக்கு சிறப்புரையாற்றும்போது பல்லடம் தொகுதி வளா்ச்சிக்கான திட்டங்களை அறிவிக்கக்கூடும் என்று எதிா்பாா்க்கின்றோம் என்றாா்.
இந்நிகழ்வில் பல்லடம் முன்னாள் எம்எல்ஏ-க்கள் கரைப்புதூா் ஏ.நடராஜன், கே.பி.பரமசிவம், நகரச் செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி, நிா்வாகிகள் வழக்குரைஞா் வெங்கிடாசலபதி, பானு பழனிசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.