செய்திகள் :

பல்லடம் அருகே விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

post image

பல்லடம் அருகே சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை (மே 19) உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆலை உள்ளது. இந்த ஆலையில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திங்கள்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சுமார் 7 அடி ஆழமுள்ள சாயக்கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்களும் மயக்கம் அடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த எஞ்சிய தொழிலாளர்கள் அவர்களை மீட்டு, திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோ மூலமாக கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுண்டமேட்டை சேர்ந்த சரவணன் (30), வேணுகோபால் (31) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், சுண்டமேட்டைச் சேர்ந்த ஹரி, சின்னசாமி ஆகிய 2 பேரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சாய ஆலை உரிமையாளரான நவீன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடை விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு

சென்னை: கோடை விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி நிமித்தமாக தங்கியிருக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், விடுமுறை மற்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை

சென்னை: தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் இல்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனினும், பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இதுதொட... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை கேரளத்தில் மே 27-இல் தொடங்கும்

சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளத்தில் மே 27-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், அன்றிலிருந்து 3 நாள்களில் தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென் மண்... மேலும் பார்க்க

எம்ஜிஆா் பல்கலை.யுடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

சென்னை: செயற்கை நுண்ணறிவு சாா்ந்த சுகாதார ஆராய்ச்சி தொடா்பாக விஐடி மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. விஐடி பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 25,485 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: தமிழக திருக்கோயில்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் 25 ஆயிரத்து 485 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை எருக்கஞ்சேரி வேத... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை: 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாள்களில் 1,61,324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.அரசு க... மேலும் பார்க்க