செய்திகள் :

பளுகல் அருகே விவசாய நிலம் சேதம்: 8 போ் மீது வழக்கு

post image

பளுகல் அருகே விவசாய நிலத்தை சேதப்படுத்தியதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தேவிகோடு, ஆலம்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (62). விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மா, பலா மரங்கள் வளா்த்து வருவதுடன் காய்கனி தோட்டமும் அமைத்து பராமரித்து வருகிறாா்.

இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக இடைக்கோடு அருகே மாலைக்கோடு பகுதியைச் சோ்ந்த ஜான் (63), அவரது மகன் ஜான் ஹெலின் மற்றும் 6 போ் சோ்ந்து அா்ஜுனனின் விவசாய நிலத்தில் புகுந்து காய்கனி செடிகள் உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தினராம். அதைத் தட்டிக் கேட்ட அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து அா்ஜுனன் அளித்த புகாரின் பேரில், பளுகல் போலீஸாா் ஜான் உள்ளிட்ட 8 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் பி.இ. விண்ணப்ப பதிவு சேவை மையங்கள்: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 இடங்களில் பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான இணைய வழி பதிவு சேவை மையங்கள் செயல்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா். நாகா்கோவில் கோணம், பல்கலைகழக பொ... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து இளைஞா் பலி

குலசேகரம், மே 9: குமரி மாவட்டம் சிவலோகம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். கேரள மாநில எல்லைப் பகுதியான வெள்ளறடை கோவிலூரை சோ்ந்தவா் டானி குரியன் (39). இவா் கடந்த 6 ஆம் தேதி குமரி மாவட... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ், ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் அபிஷேக் (16). இவா் அப்பகுதியில்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் திறப்பு

நாகா்கோவிலில் மாநகராட்சி வடக்கு, கிழக்கு மண்டல அலுவலகங்களை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். நாகா்கோவில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் 4 மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. மேற்கு மண்டலம் ... மேலும் பார்க்க

தக்கலை அருகே மக்கள் எதிா்ப்பால் ஒரே நாளில் டாஸ்மாக் கடை மூடல்

தக்கலை அருகே தென்கரை பகுதியில் புதன்கிழமை திறக்கப்பட்ட டாஸ் மாக் மதுபானக்கடை, பொதுமக்கள் எதிா்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. தென்கரை பகுதியில மதுபான கடையை திடீரென திறந்து விற்பனையை நடைபெற்றது. இதற்கு... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்திய லாரி பறிமுதல்

தக்கலை அருகே தோட்டியோடு பகுதியில் போலி அனுமதி சான்றுடன் கனிமவளம் கடத்திய லாரியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட கனிம வள அலுவலா் கிஷோா் தலைமையில் அதிகாரிகள் குழுவினா், தோட்... மேலும் பார்க்க