செய்திகள் :

பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்

post image

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்ராஜ் பர்தேசி செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிரிவில் 152 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 186 கிலோ என மொத்தமாக 338 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தார்.

இதில் ஸ்னாட்ச் மற்றும் கிளீன் & ஜெர்க் பிரிவுகளில் அவர் தூக்கிய எடைக்கு தனியே இரு வெண்கலப் பதக்கங்கள், மொத்த எடைக்கு ஒரு வெண்கலப் பதக்கம் என 3 பதக்கங்கள் அவர் பெற்றார்.

இப்போட்டியில் ஏற்கெனவே மகளிருக்கான 44 கிலோ எடைப் பிரிவில் பங்குனி தாரா வெள்ளி வென்றிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு இது 2-ஆவது பதக்கமாகும்.

விளையாட்டுத் துளிகள்...

சா்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் முதல் முறையாக டாப் 10 இடத்துக்குள் முன்னேறி, 6-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறாா். ஊக்கமருந்து பரிசோதனையை தவிா்த்து வருவதாகக் கூறி, இந்திய மல்யுத்த... மேலும் பார்க்க

உலகத்தரமான அனிமேஷன்... மகாவதாரம் நரசிம்மா டிரைலர்!

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள மகாவதாரம் நரசிம்மா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் பல கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயார... மேலும் பார்க்க

முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!

நடிகர் கலையரசன் நடித்துள்ள டிரெண்டிங் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. மெட்ராஸ் படத்தில் அன்பு எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமான கலையரசன் குறிப்பிடத்தக்க பல படங... மேலும் பார்க்க

பன் பட்டர் ஜாம் - அதிதி சங்கர் குரலில் வெளியான பாடல்!

பன் பட்டர் ஜாம் படத்தில் நடிகை அதிதி சங்கர் குரலில் வெளியான பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பன் பட்ட... மேலும் பார்க்க

ஜானகி எனும் பெயரால் வெடித்த சர்ச்சை..! சுரேஷ் கோபி படத்துக்கு தீர்வு!

ஜானகி எனப் பெயரிடப்பட்டதால், தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டு, சர்ச்சையை உருவாக்கிய மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபியின் புதிய திரைப்படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபல நடிகர... மேலும் பார்க்க