பள்ளத்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பள்ளத்தில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் புதிய தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (61). இவா், ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்ததாகத் தெரிகிறது.
பாலகிருஷ்ணன் ஏப்ரல் 29-ஆம் தேதி நள்ளிரவு இயற்கை உபாதைக்காக வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில், அங்குள்ள பள்ளத்தில் தவறி விழுந்தாராம். இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைதீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்ட பாலகிருஷ்ணன், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.