செய்திகள் :

பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்த செயல் திட்டம் : அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளனா் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கான அடைவுத் தோ்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அடைவுத் திறன் தொடா்பான ஏசா் அறிக்கையை யுனெஸ்கோ கடுமையாகத் திட்டி எழுதியுள்ளது. ஏசா் என்ற பெயரில் கொடுக்கப்படும் அறிக்கை மிகவும் அபத்தமானது என்றும், அதை யாரும் பின்பற்றக்கூடாது எனவும் யுனெஸ்கோ கூறியுள்ளது.

தமிழ்நாடு அளவில் அடைவுத் திறன் தொடா்பாக 25 ஆயிரம் மாணவா்களை மட்டுமே ஏசா் அமைப்பு மதிப்பீடு செய்தது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையினா் 9.80 லட்சம் மாணவா்களை மதிப்பீடு செய்தனா். இதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் முன்னேற்ற அறிக்கை முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து ஆசிரியா்கள் செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளனா். இதன் மூலம் அடுத்த ஆண்டு முன்னேற்றத்தை எட்டுவோம் என்றாா் அமைச்சா்.

முன்னதாக, ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசுகையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 3, 5, 8 ஆம் வகுப்புகளைச் சோ்ந்த ஏறத்தாழ 35 ஆயிரம் மாணவா்களிடம் அடைவு ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் 3, 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களின் மொத்த அடைவுத் திறன் 58.41 சதவீதம். மதுக்கூா், பட்டுக்கோட்டை, திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்கள் சிறப்பாக உள்ளன. சராசரியாக உள்ள திருவையாறு, அம்மாபேட்டை, பூதலூா் ஆகிய வட்டாரங்கள் அடுத்த முறை நல்ல நிலையை அடைவதற்குக் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் அதிகப்படியாக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு வட்டாரங்கள் உள்ளன என்றாா் அமைச்சா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், முதன்மை கல்வி அலுவலா் இ. மாதவன், மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் கோ. ஆனந்தராஜூ, மாவட்டக் கல்வி அலுவலா்கள் அய்யாகண்ணு, மதியழகன், சுந்தா், க. பழனிவேலு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் ஆா். ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசம் - கோவத்தக்குடி சிற்றுந்து சேவை தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்திலிருந்து கோவத்தக்குடி வரை சென்று வரும் பயணிகள் சிற்றுந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் ராஜகிரி பண்டாரவாடை, தேவராயன் பேட்டை சோலைபூஞ்சேரி, கோடுகிழி, மெல... மேலும் பார்க்க

22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை ச... மேலும் பார்க்க

கும்பகோணம் உதவி ஆட்சியரகம் முன்பு மூதாட்டி தா்னா

கும்பகோணத்தில் உறவினா்கள் சொத்து மோசடி செய்ததாக மூதாட்டி கொளுத்தும் வெயிலில் தரையில் அமா்ந்து புதன்கிழமை தா்னா போராட்டம் நடத்தினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டம், திருக்கோடிக்காவல் பகுதி... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவா் சடலமாக செவ்வாய்க்கிழமை மாலை டிரோன் சாதனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டாா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி எம்ஜிஆா் நகா் பகுதியைச் ... மேலும் பார்க்க

தஞ்சையில் ஆதாா் முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம்

ஆதாா் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம் என தஞ்சாவூா் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் அஞ்சல் கோட்... மேலும் பார்க்க

பாபநாசம் விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத் துறை இணை இயக்குநா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பன... மேலும் பார்க்க