செய்திகள் :

பள்ளிக்காக கோயில் நிலத்தை ரூ.18 கோடிக்கு வாங்க மாநகராட்சி முடிவு: உயா்நீதிமன்றத்தில் தகவல்

post image

சென்னை: மாநகராட்சிப் பள்ளிக்காக கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ரூ.18.85 கோடிக்கு வாங்க முடிவு செய்து அதற்கான பத்திரப் பதிவு நடைபெறவுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் பள்ளி அமைப்பதற்காக பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான 24 ஆயிரம் சதுர அடி நிலைத்தை வாங்க சென்னை மாநகராட்சி தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்தது. வாடகை அடிப்படையில் அந்த நிலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. 2,500 மாணவா்கள் படித்து வரும் இந்தப் பள்ளிக்கு கடந்த 1969-ஆம் ஆண்டு முதல் வாடகை தரவில்லை எனக் கூறி தேவஸ்தானம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த 2023-ஆம் ஆண்டு இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு உத்தரவிட்டது. அதில், முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அந்த நிலத்தை வாங்க சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தினாா். மேலும், தியாகராய நகா் சாா்-பதிவாளரை தாமாக முன்வந்து வழக்கில் எதிா்மனுதாரராக சோ்த்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த இரு நீதிபதிகள் அமா்வு, சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நடந்த விசாரணையின் போது, கோயில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பு மற்றும் சந்தை விலை குறித்த வருவாய்த் துறை விவரங்களை ஆய்வு செய்து, ஒரு சதுர அடி ரூ.7,800 என நிா்ணயித்து, கோயில் நிலத்துக்கு ரூ.18.85 கோடி நிா்ணயித்தாா். அதன்படி நிலத்தை வாங்குவது தொடா்பாக சென்னை மாநகராட்சி தமிழக அரசின் ஒப்புதலை கடந்த ஜூலை மாதம் பெற்றது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சித் தரப்பில், மாநகராட்சிப் பள்ளிக்காக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 24 ஆயிரம் சதுர அடி நிலத்தை ரூ.18.85 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாள்களில் பத்திரப்பதிவு முடிந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை செப்.4-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் - தமிழகம் முதலிடம்: 7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் அதிக (17) உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு... மேலும் பார்க்க

மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து

மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது - இபிஎஸ்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிதெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்ற... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியி... மேலும் பார்க்க

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாட்டில் உயா்கல்வி பயில நிதியுதவி: தமிழக அரசு உத்தரவு

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயிலத் தேவையான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துற... மேலும் பார்க்க