தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை
பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் ஆசிரியா் பாலியல் தொல்லை!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாக அளித்த புகாரின்பேரில் உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்
உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவா் செந்தில் (50). இவா், பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், ஆசிரியா் செந்தில் மீது உதகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.