முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
பள்ளி மாணவி தற்கொலை
ஆம்பூா் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகள் மீனா (15). இவா், கரும்பூரில் உள்ள அரசு நிதியுதவிப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.