செய்திகள் :

பழநி உபகோயில் கும்பாபிஷேகம்: யூடியூப் சேனலுக்கு வீடியோ கவரேஜ் ஆர்டரா? கொந்தளித்த செய்தியாளர்கள்

post image

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போதே, ஆகமவிதிகளை மீறி அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது, உபகோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை, கோயில் கருவறைக்குள் அரசியல்வாதிகள் அனுமதிக்கப்பட்டனர் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பழநி
பழநி

இந்நிலையில் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அடிவார மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா சனிக்கிழமை தொடங்கியது. மூன்று கால வேள்வி பூஜைகள் முடிக்கப்பட்டு, இன்று காலை 6 மணி முதல் நான்காம் கால வேள்வி பூஜை நடத்தப்பட்டு, காலை 10 முதல் 10.30-க்குள் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை நிர்வாகம் செய்திருந்தது. இவ்விழாவில் திண்டுக்கல் மட்டுமில்லாது பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்குச் செய்தி சேகரிக்கச் சென்று செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, தனியார் யூடியூப் சேனலிடம் வீடியோ, போட்டோ வாங்கிக் கொள்ளுமாறு கூறப்பட்டது. இதனை ஏற்காத செய்தியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

பழநி முருகன் கோயில்
பழநி முருகன் கோயில்

கோயில் நிர்வாகம் தரப்பில் விசாரித்தபோது, "கோயில் இணை ஆணையர் மாரிமுத்து திருச்சியில் பணியாற்றியபோது, அங்குள்ள ஒரு நிறுவனத்துக்குப் போட்டோ, வீடியோ எடுக்க ஆர்டர் கொடுத்துள்ளார். அவர்கள் யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். பழநி வந்தபிறகும் அவர்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். அவர்கள் தங்கள் யூடியூப் சேனல் பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வேறு யாரையும் அனுமதிக்க விடாமல் செய்துள்ளனர். மேலும், நாங்களே செய்தியாளர்களுக்குப் புகைப்படம் மற்றும் வீடியோ கொடுத்துவிடுகிறோம் எனக் கூறியுள்ளனர். இதற்கு அதிகாரிகள் ஒத்துழைத்துள்ளதால் செய்தி சேகரிக்க வந்தவர்கள் கோபமடைந்து சென்றுவிட்டனர்" என்றனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்க இணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரை தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

இசையால் விழாக்கோலம் பூண்ட திருவையாறு... தியாகராஜ ஆராதனை; பஞ்சரத்தின கீர்த்தனை பாடி இசையஞ்சலி!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் வட கரையில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இசை மேதை ஸ்ரீ சத்குரு தியாகராஜர் சமாதி அமைந்துள்ளது. அந்த இடத்தில் கோயில் எழுப்பி ஸ்ரீ சத்குரு தியாகராஜர் சிலை ... மேலும் பார்க்க

மஹரசங்கராந்தி : தஞ்சாவூர் பெரிய கோயில் நந்திக்கு 2,000 கிலோ காய், கனி, இனிப்புகளில் அலங்காரம்

உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் பெங்கல் விழாவான நேற்று மாலை, மகாநந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏர... மேலும் பார்க்க

``சபரிமலை ஐயப்பனின் திருவபரண அலங்காரத்தை பெண்களும் தரிசிக்கலாம்" பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்!

சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு மகரவிளக்கு அன்று திருவாபரணங்கள் சாற்றி பூஜைகள் நடப்பது நமக்குத் தெரியும். சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சாற்றப்படும் அதே திருவாபரணங்கள் பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு சாற்றி வழிபடும... மேலும் பார்க்க

பொங்கல் தரிசனம்: `காசி முதல் திருக்கழுக்குன்றம் வரை'- அபூர்வ பலன்களை அருளும் சூரிய தலங்கள்

சூரிய பகவான், சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்ற திருத்தலங்கள் ஏராளம். அவற்றுள் முதன்மையானது காசி. இங்கு, 12 திருநாமங்களுடன் 12 இடங்களில் எழுந்தருளி உள்ளார் சூரியன். இந்த பன்னிரண்டு ஆதித்தியர் (சூரியன்)க... மேலும் பார்க்க

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு! - கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மக்கள்! - Album

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு.! கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மக்கள்.! மேலும் பார்க்க