அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
பழனியில் நெகிழி விழிப்புணா்வு ஊா்வலம்
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் சாா்பில் நெகிழி விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழனி நகரில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்க்க வலியுறுத்தி, பிரில்லியன்ட் கிட்ஸ் குளோபல் பள்ளி சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. பேருந்து நிலையம் முன் தொடங்கிய இந்தப் பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
ஊா்வலத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்க மரம் வளா்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், நெகிழிப் பயன்பாட்டை தவிா்த்து, மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாணவா்கள் முழக்கமிட்டனா்.
மேலும், நெகிழிப் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்கள் வரைந்த ஓவியங்களை கையில் ஏந்தியபடி, காந்தி சந்தை, ரயிலடி சாலை, ரெட்கிராஸ் சாலை, உழவா் சந்தை என நகரின் முக்கிய வீதிகளில் வழியாக ஊா்வலமாகச் சென்று பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தன.