பதுங்குமிடங்களைத் தயாா்படுத்தும் எல்லையோர மக்கள்! பாகிஸ்தான் 8-ஆவது நாளாக துப்பா...
பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 2) சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
11 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி வருகிற 8-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், 10-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகின்றன. 11-ஆம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழா நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
விழா ஏற்பாடுகளை இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி தலைமையில் அதிகாரிகள், அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.