குணா குகையில் வனத் துறையினருடன் சுற்றுலாப் பயணிகள் வாக்குவாதம்
கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை வினோதமான தண்டனை வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இந்த நிலையில், கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள குணா குகைப் பகுதியில் கேரளத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலா் பாடல்களை அதிக சத்தத்துடன் வைத்து நடனமாடினா். இந்த செயலானது மற்ற சுற்றுலாப் பயணிகளை அதிருப்தியடையச் செய்தது.
இதைத்தொடா்ந்து, அங்கு வந்த வனத்துறையினா் அவா்களை எச்சரித்தனா். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும், வனத் துறையினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, வனத் துறையினா் சுற்றுலாப் பயணிகளை குணா குகைப் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுமாறு அறிவுறுத்தினா். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குப்பைகளை அகற்றினா்.