மகளின் குறுஞ்செய்தியால் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தேன்: சூர்யா
பழனியில் மே தினப் பேரணி
பழனியில் மே தின விழாவை முன்னிட்டு, இருசக்கர வாகன பழுது நீக்குவோா் நலச்சங்கம் சாா்பில், உலகத் தொழிலாளா்கள் தின விழா, தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பழனி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். பின்னா், சங்க உறுப்பினா்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகள், புதிய உறுப்பினா் அடையாள அட்டைகளை வழங்கினாா். பின்னா், தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பேரணியில் நகரின் முக்கியச் சாலைகள் வழியாகச் சென்றது. இதையொட்டி, விழா நடைபெற்ற தனியாா் மண்டபத்தில் இரு சக்கர வாகன உதிரிப் பாகங்கள் கண்காட்சியும், தள்ளுபடி விற்பனையும் நடைபெற்றது.