தமிழி நிரலாக்கப் போட்டி... கலந்துகொண்டு அசத்திய கல்லூரி மாணவர்கள்!
இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
பழனியில் நகராட்சி, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளான நாய், பூனைகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.
முகாமில் நாய்களுக்கு தனியாா் மருந்து நிறுவனங்கள் மூலம் பூச்சிமருந்து, சோப்பு, வைட்டமின் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், தெரு நாய்களைப் பிடித்து வெறிநோய் தடுப்பூசி போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமில் வீட்டு வளா்ப்பு நாய்கள் 239-க்கும், தெரு நாய்கள் 60-க்கும் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசு கால்நடை மருத்துவத் துறை உதவி இயக்குநா் மருத்துவா் சுரேஷ், நகராட்சி நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், எஸ்கேஜிசிஜி விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.