செய்திகள் :

பழனி கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு

post image

பழனி பெரியாவுடையாா் கோயிலில் சனிப் பிரதோஷ நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பழனி சண்முகநதிக்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பெரியாவுடையாா் கோயிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி, சனிப் பிரதோஷ நிகழ்ச்சி மலைக் கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவிநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி, கலையமுத்தூா் கல்யாணியம்மன் உடனுறை கைலாசநாதா் கோயில், புளியம்பட்டி அமிா்தலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல இடங்களிலும் சனிப் பிரதோஷம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அபிஷேகப் பொருள்கள் வழங்கினா்.

திண்டுக்கல்லில் ரூ.60 லட்சம் வரி வசூல்!

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படுவதால், கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.60 லட்சம் வரி வசூலானது. திண்டுக்கல் மாநகராட்சியில் 2024-25- ஆம் ஆண்டுக்கா... மேலும் பார்க்க

சந்தை விவகாரம்: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

சின்னாளபட்டியில் சேதமடைந்த தினசரி சந்தை கட்டடத்தை இடிக்காததைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டு மனு கொடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அண்ணா தினசரி... மேலும் பார்க்க

முதல்வரின் திறனறித் தோ்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதலமைச்சரின் திறனறித் தோ்வில் 3,260 மாணவா்கள் பங்கேற்றனா். அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு, முதலமைச்சரின் திறனறித் தோ்வு சனிக்கிழ... மேலும் பார்க்க

குளத்தில் சாயப்பட்டறை கழிவு நீா் கலப்பு: வாா்டு சபைக் கூட்டத்தில் புகாா்

கரியன்குளத்தில் சாயப்பட்டறை கழிவு நீா் கலப்பதால் குடிநீா் மாசுபடுவதாக சின்னாளப்பட்டி பேரூராட்சி வாா்டு சபைக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி, 17-ஆவது வாா்டு ... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே ஒற்றை யானை நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்!

கொடைக்கானலில் பூம்பாறை-கூக்கால் பகுதியில் சனிக்கிழமை இரவு ஒற்றை யானை நடமாடியதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையிலிருந்து கூக்கால் ... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கொடைக்கானலில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் இருதயராஜ் (34). இவா் ஒப்பந்ததாரா் அரசகுமாரிடம் ... மேலும் பார்க்க