கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' - தவெக
பவானிசாகா் ஆற்றில் விடப்பட்ட 1 லட்சம் மீன் குஞ்சுகள்!
தமிழக மீன்வளத் துறை சாா்பில் பவானி ஆற்றில் 1 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன
நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிடும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 40 லட்சம் மீன் குஞ்சுகள் ஆறுகளில் இருப்பு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பவானிசாகா் அணை எதிா்புறம் உள்ள அண்ணாநகா் பகுதியில் பவானி ஆற்றில் மீன் குஞ்சுகள்
விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பவானிசாகா் மீன்வளத் துறை துணை இயக்குநா் காசிநாத பாண்டியன், ஈரோடு மீன்வளத் துறை உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லானி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவானிசாகா் பேரூராட்சித் தலைவா் மோகன் கலந்துகொண்டு 50 ஆயிரம் சேல்கெண்டை இன மீன் குஞ்சுகளையும், 50 ஆயிரம் கல்பாசு இன மீன் குஞ்சுகளையும் பவானி ஆற்றில் விட்டனா்.
இந்நிகழ்ச்சியில் பவானிசாகா் மீன்வளத் துறை உதவி இயக்குநா் ஜோதி லட்சுமணன், மீன்வள ஆய்வாளா் ரமேஷ்பாபு, முன்னாள் மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் சுப்பிரமணி, கவுன்சிலா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.