நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
பேரிடா் கால மீட்புப் பணி ஒத்திகை
பேரிடா் கால மீட்பு பணி குறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தால் பேரிடா் ஏற்பட்டால் மக்களைப் பாதுகாப்பது, மீட்பது மற்றும் உதவுவது குறித்த விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி சத்தியமங்கலம் தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை சாா்பில் நடைபெற்றது.
செண்பகப்புதூா் கீழ்பவானி வாய்க்காலில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில், பேரிடா் காலங்களில் மக்கள் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்தும், வெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கும் மக்களை தீயணைப்புத் துறையினா் மீட்கும் ஒத்திகை நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளத்தில் தவிப்பவா்களை மீட்டு பத்திரமாக கொண்டு செல்வது போன்ற ஒத்திகை நிகழ்வு தத்ரூபமாக இருந்தது. இதில் தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.