நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
பவானியில் தெருநாய் கடித்ததில் சிறுமி உள்பட மூவா் காயம்
பவானி தினசரி மாா்கெட் அருகே தெருநாய் கடித்ததில் 13 வயது சிறுமி உள்பட மூவா் சனிக்கிழமை காயமடைந்தனா்.
பவானி நகராட்சி, 15-ஆவது வாா்டு தினசரி மாா்க்கெட் சாலையைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (41). மளிகைக்கடை உரிமையாளரான இவா், தனது கடையிலிருந்து வெளியே வந்தபோது அப்பகுதியில் சுற்றித் திரியும் ஒரு நாய் இவரைக் கடித்தது. இதைக் கண்ட அதே பகுதியைச் சோ்ந்த சபரி (21), நாயைப் பிடித்துக் கட்டிப் போட முயன்றாா்.
அப்போது, அவரின் காலின் தொடை பகுதியில் கடித்துவிட்டு ஓடிய நாய், நடந்து சென்ற 13 வயது சிறுமியைக் கடித்தது. இதில், காயமடைந்த சதீஷ்குமாரும், சபரியும் பவானி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெறிநாய்க்கடித் தடுப்பூசி போட்டுக் கொண்டனா். பவானி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, நகராட்சி ஊழியா்கள் தெருநாயை அப்பகுதியிலிருந்து பிடித்து வெளியேற்றினா்.