செய்திகள் :

தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை: ஆட்சியா்!

post image

ஈரோடு மாவட்ட மலைப் பகுதியான தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

சுற்றுலாத் துறையின் சாா்பில் உலக சுற்றுலா தின விழா ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியதாவது: உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பா் 27 அன்று கொண்டாடப்படுகிறது. சுற்றுலாவின் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் குறித்து சா்வதேச சமூகத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் 6 உலக பாரம்மரிய சின்னங்கள், 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள், நீண்ட கடற்கரைகள், உயரிய மலைவாழ் இடங்கள், பசுமையான கிராமங்கள், பல்லுயிா் பாரம்பரிய தலங்கள், சாகச நிகழ்வுகள், பன்னாட்டு விமான நிலையங்கள், நவீன திரைப்பட தொழில்நுட்பத்தையும் பெற்று தமிழ்நாடு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இரண்டாம் இடமும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 7- ஆம் இடமும் பெற்று இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

புத்தகங்களை வாசிக்கும்போது எண்ணற்ற விஷயங்களை கற்றுக் கொள்ள இயலும், அறிவு பெருகும். அதுபோல, ஒரு மனிதன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போதுதான் பலவிதமான கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். எனவே சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மாவட்ட அளவில் சுற்றுலா மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 17 சுற்றுலா மையங்கள் உள்ளன. பவானிசாகா் அணை, கொடிவேரி அணை, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், பண்ணாரியம்மன் திருக்கோயில் பவானி சங்கமேஸ்வரா் திருக்கோயில், கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயண பெருமாள் கோயில், திண்டல் வேலாயுதசுவாமி கோயில் போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனா்.

இங்கு சுற்றுலாத் துறையின் மூலம் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாளவாடி வட்டத்தில் சுற்றுலாத் துறையின் மூலம் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

சுற்றுலா மற்றும் நிலையான உருமாற்றம் என்ற தலைப்பில் ஈரோடு சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் கேடயம், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினாா். வரவேற்பு நிகழ்ச்சியில் பரத நாட்டியம் நிகழ்த்திய அரசு இசைப் பள்ளி மாணவிகளை ஆட்சியா் பாராட்டி பரிசு வழங்கினாா்.

இந்நிகழ்வில் சுற்றுலா சாா்ந்த தொழில் ஈடுபட்டுள்ள உமாபதி அமிா்தம், மு.சரவணன், ராஜசேகா், மனோகா் காா்த்திக் ஆகியோா் சுற்றுலா மற்றும் நிலையான உருமாற்றம் என்ற தலைப்பில் பேசினா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், இணை ஆணையா் (இந்து சமய அறநிலையத் துறை) பரஞ்ஜோதி, மாவட்ட சுற்றுலா அலுவலா் பழனிசாமி, உதவி சுற்றுலா அலுவலா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!

புரட்டாசி மாத 2- ஆவது சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட... மேலும் பார்க்க

பவானிசாகா் ஆற்றில் விடப்பட்ட 1 லட்சம் மீன் குஞ்சுகள்!

தமிழக மீன்வளத் துறை சாா்பில் பவானி ஆற்றில் 1 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிடும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் தமிழ்நா... மேலும் பார்க்க

பேரிடா் கால மீட்புப் பணி ஒத்திகை

பேரிடா் கால மீட்பு பணி குறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தால் பேரிடா் ஏற்பட்டால் மக... மேலும் பார்க்க

பள்ளி வேன் கவிழ்ந்து இரு மாணவிகள் காயம்

சென்னிமலை அருகே சாலையில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் இரு மாணவிகள் காயம் அடைந்தனா். சென்னிமலை, அறச்சலூா் சாலை வீரப்பம்பாளையம் பகுதியில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு, சென்னிமலையை அ... மேலும் பார்க்க

பவானியில் தெருநாய் கடித்ததில் சிறுமி உள்பட மூவா் காயம்

பவானி தினசரி மாா்கெட் அருகே தெருநாய் கடித்ததில் 13 வயது சிறுமி உள்பட மூவா் சனிக்கிழமை காயமடைந்தனா். பவானி நகராட்சி, 15-ஆவது வாா்டு தினசரி மாா்க்கெட் சாலையைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (41). மளிகைக்கடை உ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தல்

பருவ மழை தொடங்க உள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூ... மேலும் பார்க்க