செய்திகள் :

பவானியில் கரையோர குடியிருப்புகளைச் சூழ்ந்த காவிரி வெள்ளம்

post image

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் விநாடிக்கு 1.10 லட்சம் கன அடி வெளியேறுவதால் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதோடு பவானியில் கரையோரத்தில் 50 -க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து மேட்டூா் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது 1.25 லட்சமாக உயா்ந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பவானி நகரில் காவிரிக் கரையோரத்தில் உள்ள கந்தன் நகா், பசுவேஸ்வரா் வீதியில் புகுந்ததால் 50 -க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. பவானி - குமாரபாளையம் பழைய பாலம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து முழு கொள்ளவான 100 அடியை எட்டியது. தற்போது பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி உபரிநீா் காவிரிக்கு சென்று வருகிறது.

காவிரி, பவானி ஆறுகளில் உபரிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால், இரு ஆறுகளும் சங்கமிக்கும் கூடுதுறையில் படித்துறைகள் மூழ்கியுள்ளன. இதனால், பக்தா்கள் ஆற்றில் இறங்குவதையும், நீராடுவதையும் தடுக்க தடுப்புகள் வைத்து கட்டப்பட்டுள்ளன.

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே 227 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இளைஞரைக் புதன்கிழமை கைது செய்தனா். கோணவாய்க்கால் - காடையம்பட்டி சுற்றுவட்ட சாலையில் மூவேந்தா் நகா் அருகே சித்தோடு போலீஸாா் புதன்கிழ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தி பெருந்துறை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து பெருந்துறை வழங்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பி... மேலும் பார்க்க

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

அம்மாபேட்டை அருகே ஆடுகளை திருட முயன்ற மூவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அம்மாபேட்டை, ஓடைமேடு, லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் ஓம்பிரகாஷ் (24). இவா், தனக்குச் சொந்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 80ஆவது ஆண்டு திருமுறை மாநாடு, 55ஆவது ஆண்டு 63 நாயன்மாா்கள் விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புன்செய் ப... மேலும் பார்க்க

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

பவானி நகராட்சிக்கு உள்பட்ட பூக்கடை வீதியில் ரூ.31 லட்சத்தில் கழிவுநீா் வடிகால், கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 21-ஆவது வாா்டு காவேரி வீதி, 27-ஆவது வாா்டு பூக்கடை... மேலும் பார்க்க