செய்திகள் :

பஹல்காம் தாக்குதலில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் பேசிய புதின்!

post image

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு ரஷிய அதிபர் புதின் பேசியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"ரஷிய அதிபர் புதின், நரேந்திர மோடியைத் தொடர்புகொண்டு பேசியபோது பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவித்த அவர், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்" எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் ரஷிய வெற்றி நாளையொட்டி புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், ரஷிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த ஒரு நேர்காணலில், 'பஹல்காம் தாக்குதலில் ரஷியா அல்லது சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் ஒரு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை செய்யலாம். ஒரு சர்வதேச குழு இந்த தாக்குதலை நடத்தியது யார்? என கண்டுபிடிக்கட்டும்' என்று கூறியிருந்தார்.

இதன்பின்னர் ரஷிய அதிபர் புதின், இன்று பிரதமர் மோடியை தொடர்புகொண்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!

போர்ப்பதற்றம்: பதுங்குமிடங்களைச் சீரமைக்க அரசுக்கு எல்லையோர கிராமங்கள் கோரிக்கை!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் பதுங்குமிடங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ள அங்குள்ள மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட... மேலும் பார்க்க

எல்லைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியர் கைது!

எல்லைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று (மே 5) கைது செய்தனர். இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி கூறியதாவது, ''எல... மேலும் பார்க்க

பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். புது தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த முக... மேலும் பார்க்க

மே 7 அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை: மத்திய அரசு

புது தில்லி: மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

மாற்றி யோசித்த பெற்றோர்.. 10-ஆம் வகுப்பில் தோல்வி.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்

விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், கர்நாடக மாநில பெற்றோர்கள், தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தேர்வில் தோல்வியட... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்!

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள்(இணையவழி... மேலும் பார்க்க