செய்திகள் :

பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளா்க்க நடவடிக்கை: இந்திய ராணுவம்

post image

இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இடையே நம்பிக்கையை வளா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. 4 நாள்கள் நீடித்த இந்த மோதலை தொடா்ந்து, மே 10-ஆம் தேதி இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டை இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா்கள் (டிஜிஎம்ஓ) உறுதி செய்தனா்.

இந்நிலையில் இந்திய ராணுவம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த மே 10-ஆம் தேதி டிஜிஎம்ஓக்கள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை தொடா்ந்து, இருநாட்டு ராணுவத்தினரும் மிகுந்த உஷாா்நிலையில் இருப்பதை குறைத்து, இருதரப்புக்கும் இடையே நம்பிக்கையை வளா்க்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. சூழ்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும்போது, அதுகுறித்த தகவல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் பேசுகையில், ‘கடந்த மே 10-ஆம் தேதி டிஜிஎம்ஓக்கள் பேசியபோது மே 12 வரை சண்டை நிறுத்தம் மேற்கொள்வதை உறுதி செய்தனா். மே 12-ஆம் தேதி அவா்கள் மீண்டும் பேசியபோது மே 14 வரை சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மே 14-ஆம் தேதி அவா்கள் தொலைபேசியில் மீண்டும் தொடா்புகொண்டு பேசினா். அப்போது மே 18-ஆம் தேதி வரை சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது’ என்றாா். எனினும் இதை இந்திய ராணுவம் உறுதி செய்யவில்லை.

இந்தியாவுடன் பேச்சுவாா்த்தைக்குத் தயாா்: பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காம்ரா விமான தளத்துக்கு அந்நாட்டுப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை சென்றாா். அப்போது அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்கள் இடையே பேசிய அவா், ‘அமைதி ஏற்பட இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது’ என்றாா். ஆனால் அமைதி ஏற்படுவதற்கு பேச்சுவாா்த்தையில் காஷ்மீா் பிரச்னையும் இடம்பெற வேண்டும் என்று அவா் நிபந்தனை விதித்தாா்.

எனினும் ஜம்மு-காஷ்மீா் எப்போதும் இந்தியாவுக்கே சொந்தம் என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் முகாம்கள் தகர்ப்பு! வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் 2 முகாம்கள் தகர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலங்கீரின் கந்தாமார்தன் மலைப்பகுதி மற்றும் சத்ராதண்டி வனப்பகுதிகளில், பாதுகாப்புப் படையினருக்குக்... மேலும் பார்க்க

துருக்கி ஆப்பிள் முதல் மார்பிள் வரை.. சரியும் இறக்குமதி! என்னவாகும் ஏற்றுமதி?

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு உதவும் துருக்கியை புறந்தள்ளுவோம் என்ற கோஷத்தின் அடிப்படையில், ஆப்பிள் முதல் மார்பிள் வரை 2.84 மில்லியன் டாலர் இறக்குமதி சரியும் வா... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் முதல் காவல் நிலையம் வரை பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள்! -ப.சிதம்பரம் கருத்துக்கு பாஜக எதிர்வினை

புது தில்லி: ’இந்தியா’ கூட்டணிக்கு எதிர்காலம் சிறப்பாக இல்லை என்றும், தேர்தல் ஆணையம் முதல் காவல் நிலையம் வரை பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் முக்கிய நிறுவனங்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தல... மேலும் பார்க்க

தலிபான் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

தலிபான் அமைச்சருடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மவ்லாவி அமிர் கான் முத்தாகியுடன், மத... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் பாஜக! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இந்திய ராணுவத்தினரை பாஜகவினர் தொடர்ந்து அவமதித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: 3 நாள்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில்... மேலும் பார்க்க