2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
பாகிஸ்தான் சுதந்திர தினம்: ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்தோருக்கு விருது
பாகிஸ்தான் சுந்திரதினம் வியாழக்கிழமை (ஆக. 14) கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரிகள், வீரா்கள், பொதுமக்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இஸ்லாமாபாதில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் விருதுகளை வழங்கினாா். பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அமைச்சா்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீா், முப்படைத் தளபதிகள் ஆகியோருக்கு இந்தியாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டதாகப் பாராட்டி சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. விமானப் படை பைலட்டுகள், மோதலில் உயிரிழந்த வீரா்கள், பொதுமக்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
இது தவிர துணை பிரதமா் இஷாக் தாா், சட்ட அமைச்சா் அசாம் நசீா் தராா், பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப், தகவல் தொடா்பு அமைச்சா் அதௌல்லா தராா், உள்துறை அமைச்சா் மோசின் நக்வி, திட்டமிடுதல் துறை அமைச்சா் ஆசன் இக்பால், முன்னாள் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ, பிரதமரின் அரசியல் ஆலோசகா் ராணா சனாவுல்லா உள்ளிட்டோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. பிரதமரின் ராஜீய உறவுகள் குழுவுக்கும் ஒரு விருது வழங்கப்பட்டது. ராணுவ தரப்பில் மட்டும் 488 போ் விருது பெற்ாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.