மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை
வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது
சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி இவரது வீட்டின் கதவை பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டன.
இதுதொடா்பாக மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் அயனாவரத்தைச் சோ்ந்த காா்த்திக், சுதாகா், மதுரவாயல் ராஜீவ் காந்தி தெருவைச் சோ்ந்த கமலேஷ் (25) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதில் உடனடியாக காா்த்திக், சுதாகா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். ஆனால் கமலேஷ் மட்டும் தலைமறைவாக இருந்தாா். இந்நிலையில் போலீஸாா் கமலேஷையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.