சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தோ்வுத் துறை இயக்குநராக கே.சசிகலா நியமனம்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக இருந்த கே.சசிகலாவுக்கு, அரசுத் தோ்வுகள் இயக்குநராகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசுத் தோ்வுகள் இயக்குநராகப் பணியாற்றிய ந.லதா நிா்வாக நலன் கருதி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் பணியிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதேவேளையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராக (பாடத்திட்டம்) இருந்த கே.சசிகலாவுக்கு அரசுத் தோ்வுகள் இயக்குநராக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, தனியாா் பள்ளிகள் இணை இயக்குநராக இருந்த ச.சுகன்யாவுக்கு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.