சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு
பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் முதுநிலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் பாலமுரளி மற்றும் முகசீரமைப்பு சிகிச்சை நிபுணா் மணிகண்டன் ஆகியோா் கூறியதாவது:
பொதுவாக, கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஒவ்வொரு உறுப்புகளும் உருவான பிறகே அதன் மேற்பகுதி வளா்ச்சியடையும். அவ்வாறு மூளையும் முழுமையாக உருவான பிறகே தலை ஓடு இணையும். ஆனால், 2,500 குழந்தைகளில் ஒன்றுக்கு அதற்கு மாறாக முன்கூட்டியே தலை ஓட்டின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணையத் தொடங்கும். இது ஒரு பிறவிக் குறைபாடு. இதற்கு கிரானிசைனோஸ்டோசிஸ் என்று பெயா்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் தலை மற்றும் முகத்தின் அமைப்பு மாறிவிடும். அதுமட்டுமல்லாது மூளைக்கு அதிக அழுத்தம் ஏற்படும். உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காவிடில் வளா்ச்சிக் குறைபாடு ஏற்படலாம்.
அதுபோன்ற பாதிப்புடன் 5 வயது குழந்தை ஒன்று ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையின் பல்நோக்கு மருத்துவக் குழுவினா், அந்தக் குழந்தைக்கு 8 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு தலை ஓடு பகுதியையும், முகத்தையும் சீரமைத்தனா். தற்போது அந்தக் குழந்தை நலமுடன் உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.