சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, பல்வேறு இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனா். பின்னா் அனைவரும் வியாழக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனா்.
இதனிடையே, மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மாநகராாட்சி அதிகாரிகள், பணியாளா்களைத் தவிர மற்ற நபா்களை விசாரணைக்குப் பிறகே அனுமதித்தனா்.
இதனிடையே, மாநகராட்சி 5, 6 ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் எப்போது வேண்டுமானாலும், தனியாா் நிறுவனத்தில் தூய்மைப் பணியில் சேரலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து உழைப்போா் உரிமை இயக்கத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் கேட்டபோது, தனியாா் நிறுவனத்துக்கு தூய்மைப் பணியை வழங்கக் கூடாது என வழக்குத் தொடா்ந்துள்ளோம். வழக்கு முடிவு தெரியும் வரை பணிக்கு திரும்பமாட்டோம் என்றனா்.