மொஹரம் பண்டிகை: ஜூலை 7ஆம் தேதி அரசு விடுமுறையா? உண்மை என்ன??
பாகிஸ்தான்: 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது.
எல்லை மாகாணமான கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இரவுகளில் இந்த ஊடுருவல் முயற்சி நடைபெற்றதாகவும், அதை ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். பயங்கரவாதிகளிடம் இருந்த ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.