மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்ப...
``பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிறது'' - அனுராக் தாக்கூர் குறித்து சு.வெங்கடேசன்
தேசிய விண்வெளி தினத்தன்று இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் மாணவர்களுடன் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் உரையாற்றி இருக்கிறார்.
அப்போது, 'விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் யார்' என்று மாணவர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.
மாணவர்கள் 'நீல் ஆம்ஸ்ட்ராங்' என்று பதிலளித்திருக்கின்றனர்.
தொடர்ந்து அனுராக் தாக்கூர், 'ஆனால், என்னைப் பொறுத்தவரை விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் ஹனுமான் என நான் நினைக்கிறேன்.

பிரிட்டிஷாரால் நமக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களைத் தாண்டி நமது வேதங்கள், நமது கலாச்சாரம், நமது அறிவை நோக்கி அதிகம் படிக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.
இவரின் இந்த உரையாடலை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில் எம்.பி சு.வெங்கடேஷன் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், "முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல.

பாஜக வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.
நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்" என்று பதிவிட்டிருக்கிறார்.