செய்திகள் :

`பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தது வரலாற்றுப் புரட்சி’ - ஓ.பன்னீர்செல்வம் திடீர் அட்டாக்

post image

நேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1999-ம் ஆண்டு பாஜக ஆட்சி கவிழ்த்தது குறித்து பேசியிருந்தார். அதாவது அது ஒரு வரலாற்று பிழை எனக் குறிப்பிட்டிருந்தார்,

இதற்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா

"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பின் நான்கு முறை, அதாவது இருபது ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமைத்த பெருமைக்குரியவர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய பெருமையும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு உண்டு.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் “இரட்டை இலை” சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்த பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.

வரலாற்று பிழையா?

இப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உச்ச நிலைக்கு அழைத்துச் சென்ற மாண்புமிகு அம்மா அவர்களை குறை சொல்லும் விதமாக “பாஜக கூட்டணி முறிவு" என்ற வரலாற்று பிழையை மாண்புமிகு அம்மா அவர்கள் செய்துவிட்டார்கள் என்று மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி மாண்புமிகு அம்மா அவர்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியிலிருந்து விலகியதால்தான், 2001 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மாண்புமிகு அம்மா அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள். இந்த வரலாறு தெரியாமல் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியிருப்பது அவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

வரலாற்றுப் புரட்சி

மாண்புமிகு அம்மா அவர்கள் செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தது. ஆனால், மாண்புமிகு அம்மா அவர்களால் சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட, அமைச்சராக்கப்பட்ட திரு. கடம்பூர் ராஜு அவர்களின் பேச்சுதான் வரலாற்றுப் பிழை.

ஜெயலலிதா - வாஜ்பாய்
ஜெயலலிதா - வாஜ்பாய்

“மோடியா, இந்த லேடியா” பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற காரணமாக இருந்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் குறை சொல்வதைப் பார்க்கும்போது "வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது" என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்களை குறை சொல்வது என்பது “உண்ட வீட்டுக்கு இரண்டகம்" செய்வதைப் போன்றது.

“ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது" மிகப் பெரிய துரோகம் என்பதை உணர்ந்து, தான் செய்த செயலுக்கு திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதற்குத் தக்க பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள்.” என்றிருக்கிறார்.

'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 முக்கிய செய்திகள்!

சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்த... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். "அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே" என்ற கேள்விக்கு,"அவர் அதிமுக கூட்... மேலும் பார்க்க

"இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது" - ட்ரம்ப் கருத்தை ஏற்ற ராகுல் காந்தி; முரண்பட்டாரா சசி தரூர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை "இறந்த பொருளாதரம்" என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் ரா... மேலும் பார்க்க

Trump: பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா; பாக்-இல் எண்ணெய் வளமா? ட்ரம்ப் கூறுவது உண்மையா?

'பாகிஸ்தானுடன் இப்போது தான் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அதன் படி, பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவ உள்ளது.இரு நாடுகளின் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒரு எண... மேலும் பார்க்க

ட்ரம்ப் - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் நெருக்கம்; குறைந்த வரி விகிதம்! - இதற்கான 4 காரணங்கள் என்ன?

இந்தியாவுக்கு 25 சதவிகித வரிப் போட்டு தள்ளியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு 19 சதவிகித வரியைத் தான் போட்டுள்ளார். மேலும், ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நட்பு வலுத்து வரு... மேலும் பார்க்க

"கவின் தாயார் கண்ணீருக்கு பதில் இருக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியும்..." - சீமான்

திருநெல்வேலியில் ஜூலை 27-ம் தேதி கவின் என்பவர் சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.இதில், கொலையாளி சுர்ஜித் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் தாய் தந்தையான காவல்துறை அதிகாரிகள் சரவணன்,... மேலும் பார்க்க