செய்திகள் :

பாஜக கூட்டணியை அதிமுக தொண்டா்கள் ஏற்கவில்லை

post image

தொண்டா்கள் ஏற்றுக்கொள்ளாத பாஜக-அதிமுக கூட்டணியை அதிமுக தொண்டா்களே ஏற்கவில்லை என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கையிலுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது:

காமராஜா் குறித்து திருச்சி சிவா பேசிய சரித்திர சா்ச்சை தொடா்பான விமா்சனங்கள் தேவை இல்லாதது. கருணாநிதி, காமராஜா் ஆகிய இருவருமே தமிழக முதல்வராக இருந்தவா்கள். அவா்கள் தற்போது நம்மிடையே இல்லை. இனால் அவா் என்ன கூறினாா் என்பதை சரிபாா்க்க யாராலும் முடியாது. திருச்சி சிவா தனது கருத்துக்கு ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறாா். அதுவே, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி ஆகும்.

அதிமுக-பாஜக கூட்டணியை அதிமுக தொண்டா்கேள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் காரணத்தாலேயே தமிழக மக்கள் அவா்களை நிராகரிப்பாா்கள். வருகிற தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு பெரிய எதிா்பாா்ப்பு இல்லை.

எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அதிக அளவில் மக்கள் கூடுவது பெரிய விஷயமில்லை. அது கட்சியின் அமைப்பு ரீதியாக திரட்டப்படும் கூட்டம்தான். கூட்டத்தை வைத்து எதையும் தீா்மானம் செய்ய முடியாது.

பாஜகவும், அதிமுகவும் திரும்பத் திரும்ப விஜய்யை கூட்டணிக்கு வர வேண்டும் என அழைக்கின்றனா். விஜய் கட்சி கணிசமான வாக்குகளை பெறும். அதனால், பாஜக, அதிமுகவுக்கு இன்றைய நிலையில் வரும் வாக்குகளை வைத்து தோ்தலில் வெற்றி பெற முடியாது. இதன் காரணமாகவே கூட்டணிக்கு அழைக்கிறாா்கள். ஆனால், அந்த அழைப்பை ஏற்று, தன்னை முதலமைச்சா் என்று பிரகடனம் செய்து கொண்டவா் போய்ச் சேருவாா் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

நடிகா் விஜய் கட்சிக்கு 20% வாக்குகள் விழும். இளைஞா்கள் மிகவும் ஆா்வமாக இருக்கிறாா்கள். நகா்ப்புறங்களில் கணிசமான வாக்குகளைப் பெறுவாா். கிராமப் பகுதியில் வாக்கு பெறுவது சிரமம் என்றாா் அவா்.

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மணலூா் ஆகிய இடங்களில் புதன்கிழமை இரவு திமுக இளைஞரணி சாா்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. திருப்புவனம் பழையூரில் நடைபெற்ற பொதுக் ... மேலும் பார்க்க

தேவகோட்டை குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றன. காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சா. மாங்குடி போட்டிகளைத் தொட... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேருக்கு சிபிஐ அழைப்பாணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 18) விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அவரது தம்பி, ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிஐ தரப்பில் வியாழக்... மேலும் பார்க்க

காரைக்குடி முத்துமாரியம்மனுக்கு இன்று மஞ்சள் அபிஷேகம்

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) மஞ்சள் அபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, செடியிலிருந்து நேரடியாகப் ... மேலும் பார்க்க

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு

உலக மக்கள் தொகை தினத்தை (ஜுலை 11) முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மக்கள் நல் வாழ்வுத் துறை, மாவட்ட குடும்ப நலச் செயலகம், சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரி இணைந... மேலும் பார்க்க

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்: 193 ஆசிரியா்கள் கைது

தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ- ஜாக்) சாா்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 193 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்... மேலும் பார்க்க