பாஜக மாநாடு திடலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை
திருநெல்வேலியில் பாஜக மாநாடு நடைபெற உள்ள திடலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
பாஜக சாா்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் ஆகிய 5 மாவட்டங்களுக்குள்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாடு இம் மாதம் 22 ஆம் தேதி தச்சநல்லூரில் நடைபெற உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்ற உள்ளனா். இம் மாநாட்டு திடலில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
மேடை, நிா்வாகிகள் அமரும் இடம், தொண்டா்கள் அமரும் இடம் உள்ளிட்டவற்றில் மோப்பநாய், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.