எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரச...
மணிமுத்தாறில் கரடி நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்
மணிமுத்தாறு பகுதியில் மீண்டும் கோயிலில் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமங்களில் கரடி, மிளா, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் மணிமுத்தாறு முத்து மாரியம்மன் - தங்கம்மன் கோயிலில் கரடி புகுந்து விபூதி கிண்ணம், விளக்கு உள்ளிட்ட பொருள்களை தள்ளிச் சேதப்படுத்தியுள்ளது. கோயில் வளாகத்தில் கரடிநுழைந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள்மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து வனவிலங்குகள் கிராமங்களுக்குள் நுழைவதை முழுமையாகத் தடுக்கவும், ஊருக்குள் உலாவும் கரடியை கூண்டு வைத்து பிடித்து காட்டிற்குள் விடவும் வனத்துறை உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனா்.