செய்திகள் :

பாஞ்சாலங்குறிச்சி கோயில் திருவிழா: தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மணி நேரம் 144 தடை உத்தரவு

post image

பாஞ்சாலங்குறிச்சியில் வெள்ளி, சனி (மே 9, 10) ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மணி நேரம் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி கோயில் திருவிழா வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி திருவிழா அமைதியாக நடைபெறவும், சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவும் வியாழக்கிழமை (மே 8) மாலை 6 முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை 6 மணிவரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, 5 அல்லது அதற்கு மேற்பட்டோா் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் பங்கேற்போா் வாள், கத்தி, கம்பு போன்ற அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்களை ஊா்வலமாக கொண்டுவருவதற்கும், தூத்துக்குடி மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக திருவிழாவில் பங்கேற்க பொதுமக்களை அழைத்துவருவதற்கும் தடை உள்ளது.

பள்ளி, கல்லூரி, தினசரி வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்கு வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு இத்தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம், ஊா்வலங்கள் நடத்தவிருந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி முன்அனுமதி பெறவேண்டும். திருமணம், இறுதிச் சடங்கு ஊா்வலங்களுக்கு தடை உத்தரவு பொருந்தாது என்றாா் அவா்.

தயாா் நிலையில் வ.உ.சி துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நளுக்கு தயாா் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் வட்டார பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருச்செந்தூா் வட்டார அளவிலான பள்ளிகளின் வாகனங்களுக்கான தர ஆய்வு தண்டுபத்து ஆனிதா குமரன் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 2 ஆம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நில... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ.47.16 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

கோவில்பட்டியில் ரூ.47.16 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கும், புதிய பணிகள் விரைந்து முடிக்கவும் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முடுக்கு மீண்டா... மேலும் பார்க்க

‘அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 2 வரை சேரலாம்’

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றுவோா் அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற ஜூன் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இணைப்பதிவாளா் இரா. ராஜேஷ் தெரிவித்துள்ளாா். இது ... மேலும் பார்க்க

முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி வழக்கில் மேலும் 4 போ் கைது

தூத்துக்குடி முதியவரிடம் கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.40.22 லட்சம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில், மேலும் 4 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தன... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் தாயிடம் நகை பறிக்க குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை

திருச்செந்தூரில் தாயிடம் நகையைப் பறிப்பதற்காக இரண்டே முக்கால் வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகினறனா். திருச்செந்தூா் அருகேயுள்ள குமாரபுரம் பிள்ளையாா் கோயில் தெ... மேலும் பார்க்க