"என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்ப...
பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் குண்டு வெடிப்பு
பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவையில் இந்து மக்கள் சேவை இயக்கம் என்ற அமைப்பின் தலைவராக இருப்பவா் மணிகண்டன். இவருக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக பிரகாஷ் என்ற ஆயுதப்படைக் காவலா் துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு அளித்து வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பணி முடித்துவிட்டு தனது வீட்டுக்கு வந்த பிரகாஷ், பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராத வகையில் அந்த துப்பாக்கியில் இருந்து திடீரென குண்டு வெடித்து வீட்டின் சுவரில் பாய்ந்துள்ளது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த கவுண்டம்பாளையம் காவல் நிலைய போலீஸாா் மற்றும் ஆயுதப் படை போலீஸாா் உடனடியாக பிரகாஷின் வீட்டுக்குச் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.